குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 151

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலை நிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்” என்று கூறித் தலைவன் வருந்தியது.

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழால் உற வீழ்ந்தெனக், கணவன் காணாது,
குழலிசைக் குரல குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது,
மறுப்பு அரும் காதலி ஒழிய, . . . . [05]

இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.
- தூங்கலோரியார்.

பொருளுரை:

ஆண் வங்காப் பறவை உடன் இல்லாத வேளையில், அதனுடைய சிவந்த கால்களையுடைய பெண் பறவையின் மீது எழால் பறவை விழுந்து தாக்கியது. அந்தப் பெண் பறவை அச்சம் கொண்டுச் சிறிய பல கூவல்களை விடுத்தது. அது குழலின் இசையைப் போன்று இருந்தது. என் காதலியை விட்டுப் பிரிந்து மலைப் பாதையில் செல்வது கடினமான காரியம். அவ்வாறு செல்வதை விடச் சாவது தான் என் இளமைக்கு ஏற்ற முடிவாகும்.

குறிப்பு:

முடிவே - ஏகாரம் தேற்றம், அசை நிலை. பேடை - பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:

வங்காக் கடந்த - (ஆண்) வங்கா சென்றப் பின், செங்காற் பேடை - அதனுடைய சிவந்தக் கால்களையுடைய பெண் பறவை, எழால் - எழால் பறவை, உற வீழ்ந்தென - மேல் விழுந்தது, கணவன் காணாது - தன் கணவனைக் காணாததால், குழலிசைக் குரல - குழலின் இசையைப் போன்ற குரலில், குறும் பல அகவும் - குறுகிய சில கூவலைக் கூவ, குன்றுகெழு - மலையில், சிறு நெறி - சிறிய பாதை, அரிய என்னாது - கடினம் என்று நினைக்காமல், மறுப்பு அரும் காதலி - விடுவதற்கு முடியாத காதலி, ஒழிய - விட்டு விலக, இறப்பல் என்பது - சாவு என்பது, ஈண்டு இங்கு, இளமைக்கு முடிவே - எனது இளமைக்கு முடிவாகும்