குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 337

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

இரந்து பின்னின்ற தலைவனுக்குத் தோழி தலைவியின் இளமைத்தன்மை கூறியபொழுது, அவன் அவள் பருவம் வாய்த்ததையும் தன்னை வருத்திய வண்ணத்தையும் உணர்த்தியது.

முலையே முகிழ் முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு
எனயான் தன் அறிவல்; தான் அறியலளே; . . . . [05]

யாங்கு ஆகுவள்கொல் தானே
பெரு முது செல்வர் ஒரு மட மகளே?
- பொதுக்கயத்துக் கீரந்தையார்.

பொருளுரை:

நகில்கள் அரும்பின; தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க் கொத்துக்கள் கீழேதாழ்ந்தன; செறிந்த வரிசையாகிய வெள்ளிய பல்லும் முதன்முறை விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில வெளிப்பட்டன; அவள் வருத்தும் பொருட்டு நான் அவளை அறிவேன்; அவள் அதனை அறிந்திலள்; பெரிய முதிய செல்வத்தையுடையாரது ஒப்பற்ற மடப்பத்தையுடைய தலைவியாகிய அவள் எத்தன்மையையுடையவளாவளோ?

முடிபு:

முலை முகிழ் முகிழ்த்தன; தலை குரல் வீழ்ந்தன; பல்லும்நிரம்பின; சுணங்கும் தோன்றின; யான் தன்னறிவல்; தான் அறியலள்; மடமகள் யாங்காகுவள் கொல்?.

கருத்து:

தலைவி பருவம் வாய்த்தவளாகி என்னை வருத்தினாள்.