குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 372

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவிக்குக் கூறுவாளாய், “இவ்வூரில் அலர் பெருகியது” என்று தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.

பனைத் தலைக் - கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை . . . . [05]

புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
- விற்றூற்று மூதெயினனார்.

பொருளுரை:

பனையின் உச்சியிலுள்ள கருக்கையுடைய நெடிய மடலானது குருத்தோடு மறைய விரைவையுடைய காற்றுக் கூட்டிய உயர்ந்த வெள்ளிய மணற்கு வியலாகிய தொகுதியைக் கொண்ட சிகரத்தையுடைய வருத்துகின்ற கடற்கரையில் கடல் வீசிய கருமணற் சேற்றையுடைய அருவியால் கூந்தலினிடத்தே பெய்யப்படுகின்ற எக்கராகக் குவிக்கப்பட்ட குவியல் உலரும் செவ்வியை அடையாததற்குள் இந்த ஆரவாரத்தையுடைய ஊரில் பழிமொழி எழுந்தது.

முடிபு:

பதுக்கை புலர்பதங் கொள்ளாவளவை இவ்வூரில் அலர் எழுந்தன்று.

கருத்து:

இங்கே அலர் மிக்கது.