குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 391

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.

உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் . . . . [05]

கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம் - தோழி! - பெரும் பேதையவே!
- பொன்மணியார்.

பொருளுரை:

தோழி! எருதானது வெறுத்து உழாமல் சோம்பிக்கிடக்கும்படி மான் வெம்மையோடு கிடந்த மழை நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கும் உருமேற்றினால் பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது; அங்ஙனம் பெய்த பெரிய மழையைப் பொருந்தி தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் மலரையுடைய கொம்பிலிருந்த போழ்ந்தாற் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம் தனித்து வருந்த கூவாநின்றன; அவை மிக்க பேதைமையையுடையன.

முடிபு:

தோழி, மழை ஒருத்தல் மடியப் பாம்பு பை அவிய மயங்கி வீழ்ந்தன்று; மழை தழீஇ வந்த மாலை கூஉம்; பெரும் பேதைய.

கருத்து:

கார்காலம் வந்தமையின் யான் வருந்துவேன்.