குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 097

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரையாமல் நெடுநாள் இருப்ப வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் வரையும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.

யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானல் அஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்து அஃதே.
- வெண்பூதியார்.

பொருளுரை:

தோழி! நான் இவ்விடத்தில் தனியே உள்ளேன்; எனது பெண்மைநலம் என்னின் நீங்கி அமையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையினிடத்தது; தலைவன் தனது ஊரினிடத்துள்ளான்; எம்மிடையே உள்ள மந்தணமாகிய நட்பைப் பற்றிய செய்தியானது பலர் அறியும் பழிமொழியாகி பொதுவிடத்தின்கண் பரவியுள்ளது.

முடிபு:

யான் ஈண்டையேன்; என் நலன் கானலஃது; துறைவன் தம்மூரான்; மறை மன்றத்தஃது.

கருத்து:

என் நலனுண்ட தலைவர் இன்னும் வரைதற்குரிய முயற்சியைச் செய்தாரல்லர்.