குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 296

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பகற்குறிக்கண் இடையீடின்றித் தலைவனோடு அளவளாவும் நிலைபெறாத தலைவி வருந்தி, தலைவன் சிறைப்புறத்தானாக, தோழிக்குக் கூறுவாளாய், “நீ அவரைக் கழறுதலை யொழி” என்று கூறும் வாயிலாகத்தன் நிலையைப் புலப்படுத்தியது.

அம்ம வாழி! - தோழி! - புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன்நின்று, . . . . [05]

கடிய கழறல் ஓம்புமதி - "தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?" என்றனை துணிந்தே.
- பெரும்பாக்கனார்.

பொருளுரை:

தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக; புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகிய சிறகையுடைய நாரை மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின் வயலிலுள்ள கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு விரும்புகின்ற தண்ணிய அழகிய துறைவனைக் கண்டால் அவன் முன்னே நின்று வளையை அணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி பிரிந்து செல்லுதல் உமக்குத் தகுமோ என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக.

முடிபு:

தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?” என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.

கருத்து:

இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.