குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 150

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவிக்கு அதனைத் தெரிவிப்ப, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; புல்லினால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தன் உடம்பாட்டைத் தெரிவித்தது.

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான்மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உண்ணோய் மல்கும்,
புல்லின் மாய்வது எவன் கொல் அன்னாய்? . . . . [05]
- மாடலூர் கிழார்.

பொருளுரை:

தோழியே மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல இடந்தோறும் ஒளியை வீசும் ஓங்கிய மலை நாட்டையுடைய தலைவனது பூசிய சந்தனம் புலர்ந்த மார்பினை யான் நினைத்தால் என் உள்ளத்தின்கண் காமநோய் பெருகும்; அம் மார்பை அணைந்தால் அந்நோய் இல்லையாதல் என்ன ஆச்சரியம்!

முடிபு:

அன்னாய், நாடன் மார்பு உள்ளின் நோய் மல்கும்; புல்லின் மாய்வது எவன்?

கருத்து:

தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.