குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 062

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

இடந்தலைப்பாடு. இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் மீண்டும் தலைவியை முன்னாள் கண்ட இடத்தில் சென்று கூட நினைக்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே . . . . [05]
- சிறைக்குடி ஆந்தையார்.

பொருளுரை:

காந்தள் மலர்களையும் அரும்பிலிருந்து மலர்ந்த புதியதான மலர்களாகிய முல்லை மலர்களையும், மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களுடன் இடையிடையே கலந்து, அழகாகத் தொடுத்த மலர்மாலையைப் போல், நறுமணத்தை உடைய தலைவியின் மேனி தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது. அது தழுவுவதற்கு இனிமையானது

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - கோடல் - இது காந்தள் மலர். இது தலைவியின் கைகளை நினைந்து கூறியது. எதிர் முகைப் பசு வீ முல்லை - இது புதிதாக முளைத்தெழும் தலைவியின் எயிற்றொழுங்கினை எண்ணி இயம்பியது. நாறு இதழ்க் குவளை, இமையையுடைய கண்களைக் கருதி என்க. இவ்வுறுப்புகள் அழகுற அமைந்திருக்கும் அழகு கருதி ‘ஐது தொடை மாண்ட கோதை’ என்றான். எதிர் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தோற்றிய, தோன்றிய,, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அரும்பிய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - ஒளி.

சொற்பொருள்:

கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை - காந்தள் மலர்களையும் அரும்பிலிருந்து மலர்ந்த புதியதான மலர்களாகிய முல்லை மலர்களையும், நாறு இதழ்க் குவளையொடு - மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களுடன், இடையிடுபு விரைஇ - இடையிடையே கலந்து, ஐது தொடை மாண்ட கோதை போல - அழகாகத் தொடுத்த மலர்மாலையைப் போல், நறிய நல்லோள் மேனி - நறுமணத்தை உடைய தலைவியின் மேனி, முறியினும் வாய்வது - தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, முயங்கற்கும் இனிதே - தழுவுவதற்கு இனிமையானது