குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 190

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான்துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.

நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி - தோழி! - பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் . . . . [05]

நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
- பூதம் புலவனார்.

பொருளுரை:

தோழி! நெறிப்பைஉடைய கரிய கூந்தலோடு பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர் புள்ளிகளையும் பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின் பசிய தலைகள் துணியும்படி வலியையுடைய இடியேறு முழங்குகின்ற பாதியிரவின் கண் பல பசுக்கள் உள்ள தொழுவத்தில் நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற ஒற்றை மணியின் குரலை அறிவாரோ?

முடிபு:

தோழி, அகன்றோர் நடுநாள் ஏறு இயங்கு தோறியம்பும் மணிக்குரலை அறிவர்கொல்?

கருத்து:

இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார் போலும்!