குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 309

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனை நோக்கி, “நீ எம்மை அகன்று எமக்கு இன்னாதன செய்யினும் யாம் நினக்கு அன்புடையேமாகி ஒழுகுவேம்” என்று தோழி கூறி வாயில் நேர்ந்தது.

கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
"கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்? என்னாது"
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் . . . . [05]

நின் ஊர் நெய்தல் அனையேம் - பெரும!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
- உறையூர்ச் சல்லியன் குமாரனார்.

பொருளுரை:

தலைவா! நீ எங்களுக்கு இன்னாதாகிய பல செயல்களைச் செய்தாலும், நீ இல்லாது வாழ வலிமை இல்லாமையினால், களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள் தாம் செய்யும் தொழிலை முடிக்கும்பொருட்டு, வண்டு உண்ணும்படி மலர்ந்த மலரின் நறுமணம் கீழேபடும்படி நீண்ட வரப்பிலே வாட விட்டாலும், “இந்தக் கொடியவர்களின் நிலத்தை விட்டு நீங்கிச் செல்வோம்” என்று எண்ணாது, நகர்த்தியும் தம்மை நீக்கிய வயலிலே பூக்கும் உன்னுடைய ஊரின் நெய்தல் மலர்களைப் போன்றவர்கள் நாங்கள்.

முடிபு:

பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறு நெய்தல் அனையேம்.

கருத்து:

நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.

குறிப்பு:

வல்லாமாறே - இடைச்சொல், ஏகாரம் அசை நிலை. நற்றிணை 275 - செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக் காணார் முதலொடு போந்தென பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெல தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும். கைவினை மாக்கள் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தொழில் புரியும் உழவர், தமிழண்ணல் உரை - பயில் வளரக் களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள்.

சொற்பொருள்:

கைவினை மாக்கள் - களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள், தம் செய் வினை முடிமார் - தாம் செய்யும் தொழிலை முடிக்கும்பொருட்டு, சுரும்பு உண மலர்ந்த - வண்டு உண்ணும்படி மலர்ந்த (உண - உண்ண என்பதன் விகாரம்), வாசம் கீழ்ப்பட - நறுமணம் கீழேபடும்படி, நீடின வரம்பின் வாடிய விடினும் - நீண்ட வரப்பிலே வாட விட்டாலும், கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது - இந்த கொடியவர்கள் நிலத்தை விட்டு நீங்கிச் செல்வோம் என்று எண்ணாது, பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் - நகர்த்தியும் தம்மை நீக்கிய வயலிலே பூக்கும், நின் ஊர் நெய்தல் அனையேம் - உன்னுடைய ஊரின் நெய்தல் மலர்களைப் போன்றவர்கள் நாங்கள், பெரும - தலைவா, நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் - நீ இன்னாதாகிய பல செயல்களைச் செய்தாலும், நின் இன்று அமைதல் வல்லாமாறே - நீ இல்லாது பொருந்துவதற்கு வலிமை இல்லாமையினால்