குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 334
நெய்தல் - தலைவி கூற்று
நெய்தல் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
“தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தால் நீ ஆற்றும் வன்மை உடையையோ?” என்று வினவிய தோழிக்கு, “அவன் பிரியின் என் உயிர் போம்” என்று தலைவி கூறியது.
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீரச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று . . . . [05]
எவனோ - தோழி! - நாம் இழப்பதுவே?
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீரச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று . . . . [05]
எவனோ - தோழி! - நாம் இழப்பதுவே?
- இளம்பூதனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன் . . . . [05]
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன் . . . . [05]
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
பொருளுரை:
தோழி! சிறிய வெண்மையையுடைய காக்கையினது செவ்விய வாயையுடைய பெரிய தொகுதி வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைக்க அக்குளிரை வெறுத்து தங்குதற்கு இடமாகிய பல மலர்களையுடைய சோலையையுடைய அகன்ற கடற்கரையையுடைய தலைவன் பிரிந்தால் நாம் இழக்கும் பொருள் நமது இனிய உயிரையன்றி வேறொன்று யாது?
முடிபு:
தோழி, சேர்ப்பன் நீப்பின் நாம் இழப்பது உயிரல்லது பிறிதொன்று எவன்?
கருத்து:
தலைவனது பிரிவை யான் ஆற்றேன்.