குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 044

பாலை - செவிலித்தாய் கூற்று


பாலை - செவிலித்தாய் கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின்னர், அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி கூறுகின்றாள்.

காலே பரி தப்பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே.
- வெள்ளிவீதியார்.

பொருளுரை:

என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன. என் கண்கள் பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன. உறுதியாக, இந்த உலகத்தில், அகண்ட இருண்ட வானத்தின் விண்மீன்களை விட அதிகப் பேர் உள்ளனர் (தலைவனும் தலைவியும் அல்லாத பிறர்).

குறிப்பு:

பலரே: ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, ஏனை ஏகாரங்கள்: அசை நிலை. இரா. இராகவையங்கார் உரை - அகன்ற பெருவிசும்பின் மீனினும் பலர் இவ்வுலகத்துப் பிறர் ஆடவர் உள்ளனர் என்றது அம்மீன் நடுவண் விளங்கும் உவா மதியனையாரைக் காணேன் என்று குறித்ததாம். இதை ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே’ (அகநானூறு 147) என்றபடி இவர் செலவயர்ந்துழிக் கூறிய பாட்டாகும். மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). மீன் - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மின்னுவது என்னுங் காரணம்பற்றி. வாள் - வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71). செவிலி - ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

சொற்பொருள்:

காலே பரி தப்பினவே - என் கால்கள் நடந்து நடந்து ஓய்ந்தன, கண்ணே - என் கண்கள், நோக்கி நோக்கி வாள் இழந்தனவே- பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன, அகல் இரு - அகண்ட இருண்ட, விசும்பின் - வானத்தின், மீனினும் பலரே - விண் மீன்களை விட அதிகம் பேர் , மன்ற - உறுதியாக, இவ் உலகத்து பிறரே - இந்த உலகத்தில் பிறர்