குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 059

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், ஆற்றாமல் வருந்திய தலைவியிடம், தோழி கூறியது.

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நின்
நறுநுதல் மறப்பரோ மற்றே? முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள் . . . . [05]

நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
- மோசிகீரனார்.

பொருளுரை:

பதலை என்னும் முரசை முழக்கும் தாளத்தையுடைய இரவலர்க்கு பரிசளிக்கும் மன்னனின் அரலை என்ற குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்களுடன் சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் நறுமணத்தையுடைய உன்னுடைய நெற்றியை தலைவர் மறப்பாரோ? பல நாட்கள் முயன்றாலும் பாலை நிலம் பல குறுக்கிட்ட இடத்தில் சென்று அரிய பொருளை எண்ணியவாறு அடையாவிட்டாலும், நீட்டித்து அங்கு அவர் தங்க மாட்டார்.

குறிப்பு:

இரா. இராகவையங்கார் உரை - அரலைக் குன்றம் - சேலம். ஓசூர்ப்புறத்து ‘அரலி குண்டா’ என்பது ஒன்றுண்டு. ஆண்டே நள்ளி என்னும் பெருவள்ளளுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு. இவற்றால் இக்கோமான் நள்ளி என்பது பொருந்தும். இன்றே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் - பதலை என்னும் முரசை முழக்கும் தாளத்தையுடைய இரவலர்க்கு பரிசளிக்கும் மன்னன், அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக் குவளையொடு - அரலை என்ற குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்களுடன், பொதிந்த குளவி நாறு நின் நறுநுதல் மறப்பரோ - சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் நறுமணத்தையுடைய உன்னுடைய நெற்றியை மறப்பாரோ, மற்றே - அசை நிலை, முயலவும் - பல நாட்கள் முயன்றாலும், சுரம் பல விலங்கிய - பாலை நிலம் பல குறுக்கிட்ட, அரும் பொருள் - அரிய பொருள், நிரம்பா ஆகலின் - முற்றக் கைகூடல் ஆகலின், நீடலோ இன்றே - அவர் நீட்டித்து அங்கு தங்குதல் இலவாகும்