குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 358

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

.

வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்;
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் . . . . [05]

பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
- கொற்றனார்.

பொருளுரை:

செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி அழுது இவ்வாறு நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க. ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து சுவரினிடத்தைப் பற்றி நிற்கும் நினது துன்பம் நெடுந்தூரம் போகும்படி மீண்டு வருவேம் என்று தலைவர் கூறிய பருவமானது இது பார் முல்லையினது மெல்லிய அரும்புகள் தலைவரைப் பிரிந்த தனிமையையுடையோர் வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சிமிக்க மாலைக்காலத்தில் பல பசுக்களையுடைய இடையர்களது மாலையிடத்தே இருந்து இப்பருவத்தைச் சொல்லுவனவற்றைப் போன்றன.

முடிபு:

பேதுறல்; நின்படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக்காண்; முல்லை மென்முகை சொல்லுபவன்ன.

கருத்து:

தலைவர் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின் அவர் விரைவில் வருவர்.