குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 264

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவால் தலைவியினது மேனியின் நிறம் வேறுபடுதலைக் கண்டு கவன்ற தோழியை நோக்கி, "யான் அவர் கேண்மையின் உறுதியை அறிவேனாதலின் ஆற்றுவேன்" என்று தலைவி கூறியது.

கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

தோழி! ஆரவாரத்தை உடைய மழை பொருந்திய காட்டாற்றினது தாழ்ந்த கரையினிடத்து தழைத்த நெடிய தோகை அசைய நடந்து ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன் நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்டநட்பானது நாம் பசலையை அடைந்தாலும் அப் பசலையொடு பொருந்தாது.

முடிபு:

நாடன் கொண்ட கேண்மை பயந்தக்காலும் பயப்பு ஒல்லாது.

கருத்து:

என் மேனியில் வேறுபாடு உண்டாயினும் என் நெஞ்சம் அவர் செய்த நட்பில் உறுதி உடையதாகையால் ஆற்றுவேன்.