குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 308

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி, “நின் பொருட்டன்றே தலைவன் பிரிந்தான்” என்று தோழி கூறியது.

சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் . . . . [05]

மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.
- பெருந்தோட் குறுஞ்சாத்தனார்.

பொருளுரை:

சோலையின்கண் உள்ள வாழையினது சுருண்ட குருத்து தான் வருந்தும்படி தெய்வத்தையுடைய பிறர் இருத்தற்கரிய மத்தகத்தைத் தடவுதலினால் வலி கெட்டு கலங்கிய துயரத்தை அடைந்த மயக்கத்தையுடைய களிறு வருந்திய மூச்சையுடைய மடப்பத்தையுடைய பிடி வருந்தும் தன் முதுகைத் தடவ நீர் இறங்கியோடும் மலைப்பக்கத்தில் அரிதிற்றுயில்கின்ற பெரிய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு மெய்யுறு புணர்ச்சியைத் தருகின்றதொரு செயலிலே தங்கியது.

முடிபு:

நாடன் கேண்மை காமந்தருவதோர் கை தாழ்ந்தன்று.

கருத்து:

தலைவன் நினக்கு நன்மை உண்டாதற் பொருட்டன்றே பிரிந்தான்.