குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 313

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பத்தோழி, இயற்பழித்த விடத்துத் தலைவி "அவரது நட்பு என்றும் அழியாதது" என்று கூறியது.

பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனோடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே . . . . [05]
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

தோழி! பெரிய கடற்கரையின் கண்ணதாகிய சிறிய வெண்மையையுடைய காக்கையானது வெள்ளமாகிய நீரையுடைய கரியகழியிடத்து மீனாகிய இரையைத் தேடி உண்டு மலர் மணம் வீசும் சோலையினிடத்துத் தங்கும் துறையையுடைய தலைவனோடு நம்மைக் கட்டினேம்; அங்ஙனம் கட்டப்பட்ட நட்பு நன்றாகப் பொருந்தியது; அது பிறராற் பிரித்தற்கு அரியதாகி முடிக்கப்பட்டு அமைந்தது.

முடிபு:

துறைவனோடு யாத்தேம்; நட்புயாத்தன்று; அது அவிழ்த்தற்கரிதாகி, முடிந்தமைந்தன்று.

கருத்து:

தலைமகனது நட்பு அழியாதது.