குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 205

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாளெனவருந்திய தோழியை நோக்கி, “தலைவர் பிரிந்தவுடன் என் நுதலிற்பசலை தானே பரந்தது” என்று தலைவி கூறியது.

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக்
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் . . . . [05]

யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே.
- உலோச்சனார்.

பொருளுரை:

தோழி! அலைகள்கொண்டு வந்திட்ட மணலையுடைய கடற்கரையையுடைய தலைவன் மின்னலைச் செய்கின்ற தொகுதியையுடையனவாகிய பெய்தலையுடைய மேகம் பெய்யாநிற்ப வானத்தில் அசையும் அன்னப் பறவை பறத்தலில் உயர்ந்ததைப்போல பொற்படைகளாற் பொலிவு பெற்ற யானைமருப்பாற் செய்த வெள்ளிய தேரின்கண் ஏறி கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள் அத்தேரின் சக்கரங்களை நனைக்க இப்பொழுது என்னைப் பிரிந்து சென்றான்; பசலையானது இதனை எப்படி அறிந்தது? எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியிடத்துஅது பரவா நிற்கின்றது.

முடிபு:

தோழி, சேர்ப்பன் ஏறி நனைப்பச் சென்றனன்; பசப்பு யாங்கறிந்தன்று கொல்? நுதலில் ஊர்தரும்.

கருத்து:

தலைவன் பிரிவினால் யான் பசலை நோயுற்றேன்.