குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 008

மருதம் - காதற் பரத்தை கூற்று


மருதம் - காதற் பரத்தை கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, . . . . [05]

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
- ஆலங்குடி வங்கனார்.

பொருளுரை:

வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் ஊரைச் சார்ந்தவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான். ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

குறிப்பு:

உள்ளுறை - இரா. இராகவையங்கார் உரை - விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம். உள்ளுறை - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க. இப்புலவருடைய பாடல்கள்: அகநானூறு 106, குறுந்தொகை 8, 45, புறநானூறு 319.

சொற்பொருள்:

கழனி - வயல், மாஅத்து - மாமரத்தினது (அத்து சாரியை), விளைந்து உகு - பழுத்து விழும், தீம்பழம் - இனிய பழம், பழன வாளை - குளத்தில் உள்ள வாளை மீன், கதூஉம் - கவ்வி உண்ணும் (கதூஉம் - இன்னிசை அளபெடை), ஊரன் - ஊரைச் சார்ந்தவன், எம் இல் - என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி - பெரிய சொற்களைக் கூறி, தம் இல் - தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் - பிறர் தூக்க தானும் கையையும் காலையும் தூக்கும், ஆடிப் பாவை போல - கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன செய்யும் - விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு - தன்னுடைய மனைவிக்கு (தாய்க்கே - ஏகாரம் அசை நிலை)