குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 104

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் நெடுங்காலம் பிரிந்துறைந்தானாக அப்பிரிவை ஆற்றாத தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டு வந்திலர்; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!” என்று கூறியது.

அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப
தாளி தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பல ஆகுவவே . . . . [05]
- காவன் முல்லைப்பூதனார்.

பொருளுரை:

தோழி! ஒன்று கூறுவன்; கேட்பாயாக; நம் தலைவர் நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியற்காலத்தில் பசுக்கள் மேயும் பனி வீழ்கின்ற காலத்திலே என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும் பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!

முடிபு:

தோழி, காதலர் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுவ.

கருத்து:

தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் மீண்டாரிலர்.