குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 368

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்தலைத் தோழியால் உணர்ந்த தலைவி, “இதுகாறும் மாமையை இழந்து துன்புற்றேன்; இனி இடையீடின்றித் தலைவனோடு இன்புறுவேன்” என்று கூறியது.

மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, . . . . [05]

நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
- .

பொருளுரை:

மெல்லிய இயல்பையுடையாய் மெல்இயலோயே! நல்ல நாளிலே நம்மை நீங்கிய குற்றமற்ற மாமையின் இயல்பை நம் வலிய இயல்பினாற் பொறுத்திருத்தலையன்றி அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால் சொல்லுதற்கு ஆற்றல் இல்லேம் சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில் ஒரு நாளேனும் இடையீடு படாத செறிந்த நீரையுடைய வெள்ளத்தினது திண்ணிய கரையிலேயுள்ள பெரிய மரத்தைப் போல தீங்கில்லாத நிலையிலிருந்து பலமுறை தலைவரைத் தழுவுவேமாக.

முடிபு:

மெல்லியலோயே, மாமை சொல்லகிற்றாம்; ஊர்க்கு முயங்குகம்.

கருத்து:

இனியாதொரு தீங்குமின்றித் தலைவரோடு கூடியிருப்பேன்.