குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 045
மருதம் - தோழி கூற்று
மருதம் - தோழி கூற்று
பாடல் பின்னணி:
பரத்தையர்பாற் சென்ற தலைவன் விட்ட தூதுவர் தலைவியினது உடம்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடம்பட்டாளென்பதை யறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடம்படுதற்குரிய இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடம்பாட்டைத் தெரிவித்தது.
காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென,
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே . . . . [05]
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென,
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே . . . . [05]
- ஆலங்குடி வங்கனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூர னெல்லினன் பெரிதென
மறுவறுஞ் சிறுவன் றாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே . . . . [05]
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூர னெல்லினன் பெரிதென
மறுவறுஞ் சிறுவன் றாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே . . . . [05]
பொருளுரை:
காலையிற் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை தழுவும் பொருட்டுச் சென்ற வளப்பம் பொருந்திய ஊரையுடைய தலைவன் மிக்க விளக்கத்தை யுடையவனென்றெண்ணி ஆண்மகப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள்; மனம் சுழலுதற்குரிய செயலைத் தலைவன் செய்யினும் அதனை மறந்து வாயில் நேர்தற்குரிய இக்குடியிற் பிறத்தல் துன்புறுத்துவதாகும்.
முடிபு:
சிறுவன் தாய் ஊரன் எல்லினனென மறுவரும்; இத்திணைப் பிறத்தல் தெறுவது.
கருத்து:
தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலின் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.






