குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 060
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது பிரிவையாற்றாத தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாம லிருப்பினும் அவரைக் காணுமாத்திரத்தில் எனக்கு இன்பம் பிறக்கும்; அஃதும் இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.
குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும், . . . . [05]
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும், . . . . [05]
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.
- பரணர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும் . . . . [05]
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும் . . . . [05]
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
பொருளுரை:
தோழி! குறிய அடியையுடைய; கூதளஞ்செடி அசைந்த உயர்ந்த மலையிலுள்ள பெரிய தேனடையைக் கண்ட காலின்மையின் எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன் உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல தலைவர் தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும் பலமுறை பார்த்தலும் எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.
முடிபு:
காதலர் நல்கார் நயவாராயினும் பல்காற் காண்டலும் இனிது.
கருத்து:
தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.






