குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 293

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியைநோக்கி, “தலைவன் ஈண்டுறைவது தெரியின் பரத்தை இங்கு வந்து அவனைக் கொண்டு செல்வள்” என்று கூறியது.

கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை . . . . [05]

தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!
- கள்ளில் ஆத்திரையனார்.

பொருளுரை:

தோழி! கள்ளைக்குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணம் ஊரினகத்துள்ள பாளையினால் ஈனப்பட்ட நாரையுடைய குறிய காய்களைக் கொண்ட உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டு மீள்வதற்கு இடமாகிய ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறுபட்ட முழு நெறியைஉடைய தழையுடை தேமலை உடைய துடையின்கண் முறையே மாறி மாறிஅசைய பொன்னால் செய்த செவ்விய அணிகலன்களை உடைய பரத்தை அவ்விடத்திலே தலைவனைக் காணும் பொருட்டு வருவாள்; நான் இரங்கத் தக்கேன்.

முடிபு:

மூதூரன்ன சேயிழை, கொழுநற்காணிய, அலைப்ப வரும; யான் அளியேன்.

கருத்து:

தலைவனை மீட்டும் பரத்தை கைக் கொள்வாள்.