குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 302

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.

உரைத்திசின் - தோழி! - அது புரைத்தோ அன்றே?
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
"பிரியா நண்பினர் இருவரும்" என்னும் . . . . [05]

அலர் - அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.
- மாங்குடிகிழார்.

பொருளுரை:

தோழி! தலைவனுடைய பிரிவால் உண்டாகிய பொறுத்தற்கரியதுயரால் வருந்துதற்கும் ஆற்றலில்லேம்; அதற்கு மேல் இறந்துபடுதலை அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்; அந்தோ! இன்னும்! நல்ல மலைநாட்டை யுடைய தலைவன் இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையார் என்று பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினனோ? ஊரிலுள்ளோர் பலர் ஒருங்கே துயிலுகின்ற இரவிலும் யான் தன்னையே நினைப்பதனால் என் நெஞ்சின் கண் வருதலை யன்றி நேரிலே வருதலை அறியான்; அங்ஙனம் இருத்தல் உயர்வுடையதோ? அன்று!; நீ கூறுவாயாக.

முடிபு:

தோழி, உழத்தலும் ஆற்றாம்; பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; நாடன் அஞ்சினன் கொல்? வரவறியான்; அது புரைத்தோ? அன்று; உரைத்திசின்.

கருத்து:

தலைவனை நான் நினைந்திருத்தலையன்றி, அவன் வந்தானல்லன்.