குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 110

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, “இனி அவர் வரினும் வாராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து படுவேன்” என்று தலைவி கூறியது.

வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர
நீலம் பைம்போது உளரி புதல
பீலி ஒள் பொறி கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த . . . . [05]

வண்ணம் துய் மலர் உதிர தண் என்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
- கிள்ளிமங்கலங்கிழார்.

பொருளுரை:

தோழி! நீரிலுள்ள நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலிலே உள்ள மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை அலைத்து நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள் உதிரும் படி குளிர்ச்சியையுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால் எத்தன்மையினள் ஆனாளோ என்று நினைந்து கவலையுறாத தலைவர் வாராவிடினும் வந்தாலும் நமக்கு எத்தகைய உறவினராவர்? வருவதற்குள் இறந்து படுவேன்.

முடிபு:

தோழி, என்னாயினள் கொல் என்னாதோர், வாராராயினும் வரினும் யாராகியர்?

கருத்து:

தலைவர் வாராமையின் யான் இறந்துபடுவேன்.