குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 243

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு, "நீ ஆற்றி இருக்க வேண்டும்" என்று வற்புறுத்திய தோழியை நோக்கி, "நான் தலைவனை நினைப்பதனால் ஆற்றாமை மீதூர்கின்றது; இனி நினையேன்" என்று இரங்கித் தலைவி கூறியது.

மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன் - தோழி! - படீஇயர், என் கண்ணே . . . . [05]
- நம்பி குட்டுவனார்.

பொருளுரை:

தோழி! மானின் குளம்பைப் போன்ற பிளவை உடைய இலைகளை உடைய அடும்பினது குதிரைக் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிய அலர்த்தி ஒள்ளிய வளையை உடைய பெண்கள் விளையாட்டைச் செய்யும் பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை இனி நினையேன்; ஆதலின் என் கண்கள் துயில்க.

முடிபு:

தோழி, சேர்ப்பனை உள்ளேன்; என்கண் படீஇயர்.

கருத்து:

தலைவனை நினையாது இருத்தல் அரிதாதலின் ஆற்றாமையும் நீங்கல் அரிது.