குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 297

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது” என்று தலைவிக்குக் கூறியது.

"அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, . . . . [05]

புணர்ந்து உடன் போதல் பெருள்" என,
உணர்ந்தேன் மன்ற, அவர் உணரா ஊங்கே.
- காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார்.

பொருளுரை:

மேல் விளிம்பை உருவிய கொடிய வில்லையுடைய மறச்சாதியாருடைய கூர்மையையுடைய நீண்ட அம்பினது வெற்றியையுடைய பகையினின்றும் தம்மைப் பாதுகாவாராகி எதிரே நின்று இறந்து பட்டவழிப்போவார் மீது தழையை இட்டுவைத்த குவியல்கள் ஊரைப்போலத் தோன்றுகின்ற மலைகள் ஓங்கியுயர்ந்த அகன்ற இடத்தில் ஆண்டுப்போய்வரைவேமென்பது முதலிய நல்ல சொற்களைக் கூறி தலைவனோடு சேர்ந்துபோதலே செய்யத்தக்க காரிய மென்று தலைவர் உணர்வதற்கு முன்னர் நிச்சயமாக யான் உணர்ந்தேன்.

முடிபு:

நனந்தலை, கூறிப்போதல் பொருளென அவர் உணராவூங்கே உணர்ந்தேன்.

கருத்து:

தலைவனுடன் சென்று நீ மணத்தலே நன்று.