குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 295

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் தோழியை வாயில் வேண்டியபொழுது அவள், “நீ பரத்தையரோடிருந்தமை தோன்ற வந்தாய்; நின்வளத்திற்குக் காரணமான தலைவியை நீத்து உறைந்தாய்” என்று கூறியது.

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென, . . . . [05]

இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
- தூங்கலோரியார்.

பொருளுரை:

உடையாக உடுத்துக் கொண்டும் மாலையாகத் தொடுத்தணிந்தும் குழை முதலிய அணிகலன்களாக அணிந்தும் கூந்தலின் கண்ணே செருகியும் தழையலங்காரத்தினாற் பொலிவு பெற்றபரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி நீ நீர்விழாவிற்குரிய அடையாளங்களோடு வாராநின்றாய்; இந்த ஊரிலுள்ளார் ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச் சிறப்பில்லாத இல்வாழ்க்கை மிக்க அழகையுடைய இளைய தலைவி இவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் புக்கனளாக இப்பொழுது விழாவையுடையதாயிற்று என்று சொல்வர்.

முடிபு:

துவன்றி நீ வருதி; இவ்வூர், ‘ஒரான் வல்சி வாழ்க்கை, குறுமகள் வந்தென விழவாயிற்று’ என்னும்.

கருத்து:

நின் செல்வத்துக்குக் காரணமாகிய தலைவியை நீத்துறைந்தமையால் ஊரினர் பழி கூறினர்.