குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 282

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வினைவயிற் பிரிந்த காலத்தில் அவன் கூறிய கார்ப்பருவம் வந்ததாக, "இப் பருவத்தின் அடையாளங்களைத் தாம் சென்ற இடத்தே கண்டு இனி நீ ஆற்றாய் என்பதறிந்து தலைவர் மீண்டு வருவார்" என்று தோழி தலைவிக்குக் கூறியது.

செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த . . . . [05]

வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவ அல்ல என்பர் கொல் - நமரே?
- நாகம் போத்தனார்.

பொருளுரை:

நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த பருவம் வாய்த்த வரகினது காற்றால் ஒலித்தலை உடைய நாற்றினது மிக்க கறுப்பை உடைய ஓர் இலையை நாட்காலத்தே வந்த மான்குட்டி கவ்வி! தின்னலென்னும் கடனைத் தீர்த்துக் கொள்ளுதற்கிடமாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட தண்ணிய கொல்லையை காண்பாராயின் நீர் விளங்குகின்ற மலைப் பக்கத்தில் ஒரு படித்தாக மலர்ந்த வெள்ளிய கூதாளத்தின் உட்டுளையை உடைய அழகிய புதிய மலர்கள் காம்பில் கழன்று உதிர்தலைப் போல நின் கை வளைகள் சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ? எண்ணார்.

முடிபு:

அவர் புனம் காணின், வளை சோர்குவ அல்ல என்பர்கொல்?

கருத்து:

தாம் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததறிந்து தலைவர் விரைவில் வருவர்.