குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 192

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க” என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும் அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல் இருப்பேன்”; என்று இரங்கிக் கூறியது.

'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே? - நோய் நொந்து உறைவி!
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும் . . . . [05]

வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பொருளுரை:

நோயால் வருந்தி உறையும் தோழி! தலைவர் இவ்விடத்தே மீண்டு வருவார் வருந்தற்க என்று நீசொல்வதனால் இப்பொழுது நான் அழாமல் இருப்பேனோ? மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய கரிய குயில் தன் மேனி பொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லை ஒக்கும்படி மாமரத்தின் கிளையினிடத்து நறிய பூந்தாதைக் கோதுகின்ற இளவேனிற் காலத்திலும் அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.

முடிபு:

“நோய் நொந்துறைவி, இனையல்” என அழா அற்கோ? வறுங்குரற் கூந்தல் தைவருவேன்.

கருத்து:

தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான் எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?