குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 246

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

இரவுக் குறி வந்த தலைவன் சிறைப்புறத்தில் இருப்ப, தலைவி தோழியை நோக்கிக் கூறுவாளாய், "நேற்று இரவில் ஒரு தேர் ஈண்டுப் போந்து சென்றது என்று சிலர் சொல்ல, அது முதல் தாய் என்னை வருத்துகின்றாள்" எனக் காவன் மிகுதியை உணர்த்தி வரைவு கடாவச் செய்தது.

'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் . . . . [05]

பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
- கபிலர்.

பொருளுரை:

தோழி! பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய சிறிய வெண்மையை உடைய காக்கை களிற்றினது காதைப் போன்ற பசிய இலையைக் கலக்கி குளிர்ச்சியை உடைய கழி நீரை இரையின் பொருட்டுத் துழாவுகின்ற பாதி இரவில் தனியாக ஒருதேர் இங்கே வந்து மீண்டு சென்றதென்று அயலார் கூறுவர்; அது தொடங்கி தாய் என்னைத் துன்புறுத்துகின்றாள்; பின்னல் நாலவிடப்பட்ட கூந்தலை உடைய மின்னுகின்ற ஆபரணத்தை அணிந்த மகளிருள் இளமை உடையோரும்; முடையோருமாகிய பிறரும! இருக்கின்றனர் அவர் தம்மை வருத்துதல் இல்லாத தாய்மாரோடு நல் வினையுடையர்.

முடிபு:

தேர் வந்து பெயர்ந்ததென்ப; அன்னை அலைக்கும்; மகளிர் இளையரும் மடவரும் பிறரும் உளர்; அவர் நற்பாலோர்.

கருத்து:

இப்பொழுது காப்பு மிக்கதாதலின், தலைவன் என்னை வரைந்து கொள்வதே நலம்.