குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 287

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வாரார்" என்று கவன்ற தலைவியை நோக்கி, "இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; வருவர்" என்று தோழி கூறியது.

அம்ம வாழி - தோழி! - காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, . . . . [05]

விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பொருளுரை:

தோழி! கேட்பாயாக; பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளர்ந்து நடக்க மாட்டாத பச்சைப் புளிச் சுவையில் விருப்பத்தை உடைய முதற் சூலை உடைய மகளிரைப் போல நீரை முகந்து கொண்டு வானத்தின் கண் ஏறாமல் அந்நீர்ப் பொறையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளம் மிக்க பல மலைகளை நோக்கி பெரிய முழக்கத்தை உடைய மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை இப்பொழுது பார்த்த பின்பும் தலைவர் நம்மைப் பிரிந்து வாராமல் இருப்பாரோ? வருவர்.

முடிபு:

தோழி, காதலர் பொழுது கண்டும் துறக்குவர் கொல்லோ?

கருத்து:

கார்ப் பருவம் வந்தமையின் இனித் தலைவர் விரைவில் மீள்வர்.