குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 174

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதை யுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!” என்று தலைவி கூறியது.

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப் . . . . [05]

பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
- வெண்பூதியார்.

பொருளுரை:

தோழி! பெய்தலையுடைய மழை பெய்யாது நீங்கிய தனிமைமிக்க பாலை நிலத்தில் கவைத்த முள்ளையுடைய கள்ளியினது காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களை நீங்கச் செய்யும் அருவழிகள் கடத்தற்கரியன வென்று கருதாராகி நம்மைப்பிரிந்து பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின் இந்த உலகத்தில் நிச்சயமாக செல்வமே உறுதிப் பொருளாவது; மன்ற! அருள்தான் தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.

முடிபு:

அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள் வயிற்பிரிவாராயின், பொருளே பொருள்; அருளே ஆரும் இல்லது.

கருத்து:

அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.