குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 182
குறிஞ்சி - தலைவன் கூற்று
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.
விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ . . . . [05]
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே?
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ . . . . [05]
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே?
- மடல் பாடிய மாதங்கீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ . . . . [05]
கலிந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ . . . . [05]
கலிந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.
பொருளுரை:
நெஞ்சே அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள் நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது சிறந்தஉச்சியையுடைய பனையின் கண் முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்த பெரிய மாலையை முறைமையோடு அணிந்து நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி ஒரு நாளில் பெரிய நாணத்தை விட்டு விட்டு தெருவின் கண் செல்லவும் தருவதோ?
முடிபு:
பேதை மெலிந்திலள்; தூது, மா மடலில் தார் பூட்டிஎன்பணிந்து எள்ளத் தோன்றி நாண் நீக்கித் தெருவின் இயலவுந் தருவதுகொல்?
கருத்து:
நான் இனி மடலேறுவேன்.






