குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 299

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவி தன் தோள் மெலிவைத் தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டு மென்பதை அவனுக்குப் புலப்படுத்தியது.

இது மற்று எவனோ - தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் . . . . [05]

கேட்டனமன் எம் செவியே; மற்று - அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
- வெண்மணிப் பூதியார்.

பொருளுரை:

தோழி! நிலத்திற்குப் பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ள நிழலில் புணர்குறியைப்பெற்ற காலத்தில் எம் கண்கள் தலைவனைப் பார்த்தன; எம்முடைய காதுகள் அவனுடைய சொற்களைக் கேட்டன; எமது பரந்தமெல்லிய தோள்கள் அவன் எம்மைமணந்தால் மாட்சிமைப்பட்ட அழகைப் பெற்று அவன் பிரிந்தால் சோர்வன; இஃது என்ன வியப்பு!

முடிபு:

தோழி, எம் கண் கண்டன; செவிகேட்டன; தோள் மணப்பின் நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப.

கருத்து:

தலைவன் இடையிட்டு வருவதால் யான் வருந்துவேனாயினேன்.