குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 218

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம், அன்றே தோழி,
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம்மின்று . . . . [05]

இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.
- கொற்றனார்.

பொருளுரை:

தோழி! அவர் என் உயிருக்கு உயிரானவர். இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நினையாது மறந்து விட்டு, தான் சென்று அவ்விடத்தில் தங்குதலில் வல்ல தலைவர் பொருட்டு, நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்குப் பலிக்கடன் செய்ய மாட்டேன், என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், நல்ல சொல்லுக்காகக் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன். அவரை நான் நினைக்கவும் மாட்டேன்.

குறிப்பு:

அன்றே - அன்று, ஏ - அசை நிலைகள், மாட்டே - ஏகாரம் அசைநிலை, நம்வயின் - உருபு மயக்கம். விரிச்சி: நற்றிணை 40 - விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 - விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 - விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 - விரிச்சி நிற்ப. சூலிக்கு (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை - கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை - துர்க்கைக்கு.

சொற்பொருள்:

விடர் முகை - மலையின் பிளவு, குகை, அடுக்கத்து - தொடர் மலை, விறல்கெழு சூலிக்கு - வீரம் உடைய சூலிக்கு, கடனும் பூணாம் - நான் பலிக்கடன் செய்ய மாட்டேன், கைந்நூல் யாவாம் - கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், புள்ளும் ஓராம் - பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், விரிச்சியும் நில்லாம் - நற்சொல்லுக்காக நான் காத்துக்கொண்டு இருக்க மாட்டேன், உள்ளலும் உள்ளாம் - நினைக்க மாட்டேன், அன்றே தோழி - இல்லையா தோழி, உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் - என்னுடைய உயிருக்கு உயிராக உள்ளவராக இருப்பதால், தம்மின்று - அவர் இல்லாமல், இமைப்பு வரை - இமைப் பொழுதும், அமையா நம்வயின் - என்னை பிரிந்திருக்கும் பொழுது நினைக்காது, மறந்து - மறந்து, ஆண்டு - அங்கு, அமைதல் - தங்குதல், வல்லியோர் மாட்டே - வல்ல தலைவர் திறத்து