குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 090

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரையாமல் நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.

எற்றோ வாழி தோழி முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கி
மங்குல் மாமழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி
வரை இழி அருவி உண் துறை தரூஉம் . . . . [05]

குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்று அன்றே.
- மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.

பொருளுரை:

தோழி! சூல் முற்றி மிளகுகொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில் இராக்காலத்தில் முழக்கத்தைச் செய்த மேகத்தினது பெரிய மழைக்கால் வீழ்ந்தனவாக மிக்க மயிரையுடைய ஆண்குரங்கு தீண்டியதனால் நழுவிய மலர்மணத்தை வீசும் பலாப்பழத்தை மலைப்பக்கத்தில் வீழும் அருவியானது நீருண்ணுந் துறையின்கண் கொண்டு வருகின்ற குன்றுகளுள்ள நாட்டையுடைய தலைவனது நட்பு நின் மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது இஃது எத்தகையது!

முடிபு:

தோழி, குன்றநாடன் கேண்மை தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்று; இஃது எற்றோ!

கருத்து:

நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.