குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 373

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவனது நட்பு என்றும் அழியாதது” என்று தோழி கூறியது.

நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ - தோழி! - நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை . . . . [05]

புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
- மதுரைக் கொல்லம் புல்லனார்.

பொருளுரை:

தோழி! நீண்ட மயிரையும் கூரிய பற்களையுமுடைய கருங்குரங்கினது கறுப்பையுடைய விரல்களையுடைய ஆணானது பக்கத்திலே தோண்டியதனால் உடைந்து மலரின் மணத்தை வீசும் பலவினது பழம் காந்தளையுடைய அழகிய சிறிய ஊரினிடத்தே மணக்கின்ற ஓங்கிய மலையையுடைய நாடனோடு பொருந்திய நமது நட்பானது உலகம் இடம்மாறினாலும் நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும் விளங்குகின்ற அலைகளையுடைய பெரியகடலுக்கு எல்லை தோன்றினாலும் வெவ்விய வாயையுடைய மகளிரது பழிச்சொல்லை அஞ்சி கெடுதல் எவ்வாறு உடையதாகும்?.

முடிபு:

தோழி, நிலம் பெயரினும் நீரும் தீயும் பிறழினும் எல்லை தோன்றினும் தொடர்பு கேடு எவன் உடைத்து?.

கருத்து:

தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாதது.