குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 191

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான் துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும் கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்” என்று தோழிக்குத் தலைவி கூறியது.

உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின் . . . . [05]

பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

தோழி! இதனை என்னென்று சொல்வேன்? வலிய மரக்கிளையில் இருந்த பெரிய தொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள் தாம் துணைகளோடு சேர்ந்தமையால் துணைவரைப் பிரிந்தாருடைய துன்பத்தை எண்ணாதனவாய் இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும் நம்மைப் பிரிந்த அயற்றன்மையை உடைய தலைவர் இங்கே மீண்டு வந்தால் மலர்களால் பொங்குதலை உடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக எம்மையும் தொடுதலை யொழிக என்று கூறுவம்; அங்ஙனம் செய்தலை உவ்விடத்துப் பார்ப்பாயாக.

முடிபு:

இதுவென் மொழிகு? கேட்டும் நீங்கிய ஏதிலாளர்வரின், "ஓதியும் புனையல், தொடா அல்" என்குவம்; அது உதுக்காண்.

கருத்து:

நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக் கொள்ளேன்.