குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 355

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

மழை பெய்யும் நடுயாமத்தில் தலைவன் வந்தானாக, “இந்த இருளில் நீ எங்ஙனம் வழி தெரிந்து எம் ஊரைத்தேடி வந்தனை?” என்று அவனுக்குத் தோழி கூறியது.

பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ? - ஓங்கல் வெற்ப! . . . . [05]

வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.
- கபிலர்.

பொருளுரை:

உயர்ச்சியையுடைய மலை யையுடைய தலைவனே மழை இடத்தை மறைப்பதனால் வானத்தைக் காண்பாயல்லை; அம்மழையின் நீர் எங்கும் பரந்து ஓடுதலினால் நிலத்தைக் காண்பாயல்லை சூரியன் போனமையால் இருள் மிக உண்டாயிற்று; இந்நிலையில் பலரும் துயில்கின்ற நள்ளிரவில் எங்ஙனம் வந்தாய்? வேங்கை மரத்தின் மலர் மணம் வீசுகின்ற எமது சிற்றூரை எங்ஙனம் அறிந்தாய்? யான் வருந்துவேன்.

முடிபு:

வெற்ப, விசும்பு காணலை; நிலங்காணலை; இருள் பட்டன்று; யாமத்து யாங்கு வந்தனை? எம் சிறு குடி யாங்கு அறிந்தனை? யான் நோகு.

கருத்து:

நீ இவ்விரவில் வருதல் குறித்து அஞ்சுகின்றேன்.