குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 230

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது குறையைக் கேட்ட தோழி தலைவிபால், “நெடுநாட்களாக நினது உடம்பாட்டை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்த தலைவன் யான் சேட்படுத்தியமையின் சில காலமாக வாரா தொழிந்தான்” என்று இரக்கம் வரும்படி கூறியது.

அம்ம வாழி, தோழி! கொண்கன்
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் . . . . [05]

தவச் சின்ரைன்ன வரவு அறியானே.
- அறிவுடை நம்பியார்.

பொருளுரை:

தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக; தலைவன் வலியை உடைய சுறா மீன் வழங்குகின்ற நீரை உடைய வழியில் சில நாட்களாக முன்னர் வந்து கொண்டிருந்த அத்தகைய வருதலை அறியானாயினான்; அங்ஙனம் வாராது இருத்தலைத் தானாகவே துணிந்து ஒழுகும் இயல்புடையன் அல்லன்; யான்! என் அறிவின்மையால் பெரிய உரிமையைப் பொருந்தி அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்தசெயல் ஒன்றை உடையேனோ?

முடிபு:

தோழி, கொண்கன் வரவறியான்; தான் துணிகுவன் அல்லன்; யான் கெழுமிச் செய்தது உடையேன் கொல்.

கருத்து:

நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான் கொல்?