குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 011

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தோழி கேட்கும்படி நெஞ்சை நோக்கிக் கூறித் தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்தியது.

கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது . . . . [05]

பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
- மாமூலனார்.

பொருளுரை:

நீடு வாழ்வாயாக என் நெஞ்சே! சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளியுடைய வளையல்கள் என் கை மெலிந்ததால் கழன்று, நாள்தோறும் உறங்காமல் கலங்கி அழும் கண்களுடன் வருந்தி இங்கு வாழ்வதிலிருந்து நாம் தப்புவோம். தலைவர் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு இப்பொழுது எழுவாயாக நீ! கஞ்சங் குல்லைக் மலர்க் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்திற்கு முன்னே உள்ள, பல வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும், அவர் இருக்கும் நாட்டிற்குச் செல்லுதலை எண்ணினேன் நான்.

குறிப்பு:

இரா. இராகவையங்கார் உரை - ‘ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்’ என்பது வளை நெகிழ்தலும் கண் கவிழ்தலுங் கண்டு அன்னை இடித்துரைக்கவும் ஊரலர் தூற்றவும் நெஞ்சே நீயும் யானும் இங்கு இப்படி வருந்தி வதிவதும் தப்புவேம் என்றதாம். ‘வடுகர் முனையது மொழிபெயர் தேஎத்தராயினும் என்றது’ தலைவியது ஆண்மையும் உணர்வும் குறித்து நின்றதெனின் நன்கு பொருந்தும். முனையது (5) - உ. வே. சாமிநாதையர் உரை - முன்னே உள்ளதாகிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பகைப்புலத்ததாகிய, தமிழண்ணல் உரை - எல்லை, இரா. இராகவையங்கார் உரை - பகைப்புலத்ததாய். ஆங்கே, நாட்டே - .அசை நிலைகள். உறைதலும் - உம் அசைநிலை, சாரியையுமாம். வரலாறு: வடுகர், கட்டி. வடுகர் - வேங்கடத்தின் வடக்கில் உள்ளவர்கள். சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). இல - இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்.

சொற்பொருள்:

கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ - சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட விளக்கமுடைய வளையல்கள் கை மெலிந்ததால் நெகிழ, நாடொறும் பாடு இல கலிழும் கண்ணொடு - நாள்தோறும் உறங்காமல் கலங்கி அழும் கண்களுடன், புலம்பி - தனித்து, வருந்தி, ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் - இங்கு வாழ்வதிலிருந்து நாம் தப்புவோம், ஆங்கே - தலைவர் இருக்கும் இடத்திற்கு, எழு இனி - செல்லுவதற்கு இப்பொழுது எழுவாயாக, வாழி என் நெஞ்சே - நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, முனாது - முன்னே உள்ள, பகைப்புலத்ததாகிய, குல்லைக் கண்ணி வடுகர் முனையது - கஞ்சங் குல்லைக் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்தின், பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் - பல வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும் (தேஎத்தர் - இன்னிசை அளபெடை), வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே - அவருடைய நாட்டிற்குச் செல்லுதலை எண்ணினேன் (சின் - தன்மை அசைச்சொல், நாட்டே - ஏகாரம் அசை நிலை