குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 272

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவி பெறுதற்கரியள் என்று தலைவன் கூறியது.

தீண்டலும் இயைவதுகொல்லோ - மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்சிலை
மான் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் . . . . [05]

குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!
- ஒருசிறைப் பெரியனார்.

பொருளுரை:

மாட்சிமைப்பட்ட வில்லை உடைய வீளை ஒலியை உடையோராய் கற்களை வீசி எழுப்பிய அகன்ற இடத்தை உடைய காட்டிடத்துத் தன் இனத்தினின்றும் பிரிந்த துன்பத்தையும் மடப்பத்தையும் உடைய பெண்மான் நேரே இருப்ப தன் தமையன்மார் சிலைத்தல் மாட்சிமைப்பட்ட மிக்க வேகத்தை உடைய ஆண் மானினது மருமத்திலே அழுந்தச் செய்து இரத்தத்தோடு பிடுங்கிய சிவந்த திரட்சியை உடைய அம்பு ஒன்றை ஒன்று மாறுபட்டாற் போன்ற மையுண்ட கண்களையும் மணம் வீசுகின்ற கரிய கூந்தலையும் உடைய தலைவியினுடைய தோள்களை மீட்டும் ஒரு கால் தழுவுதலும் என்பாற் பொருந்துவதோ!

முடிபு:

உண் கண்ணையும் கூந்தலையும் உடைய கொடிச்சி தோள் தீண்டலும் இயைவது கொல்!

கருத்து:

தலைவி பெறுதற்கரியவள்.