குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 258

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்த தலைவனை நோக்கி, "தலைவி அழகிழந்தாள்! ஆதலின் நினக்கு ஆகும் பயன் ஒன்றில்லை; ஈண்டு வாரற்க" என்று தோழி வாயில் மறுத்தது.

வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால் - பெரும! - காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை . . . . [05]

நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.
- பரணர்.

பொருளுரை:

பெரும! காவிரி நதியினது பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வளர்ந்த. மருத மரத்தில் கட்டிய மேல் உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய சேந்தனுடைய தந்தையும் கள்ளாகிய உணவையும் அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும் பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய அழிசியினது ஆர்க்காடென்னும் நகரத்தைப் போன்ற இவளது குற்றந் தீர்ந்த மாட்சி மைப்பட்ட அழகு அழிதலைக் கண்ட பின் எமது சேரிக்கண் வருதலை யொழிவாயாக; நின் மாலையைத் தருதலை யொழிக; பழிமொழி உண்டாகின்றது.

முடிபு:

பெரும, இவள் நலம் தொலைதல் கண்டு வாரல்; தாரல்.

கருத்து:

நீ ஈண்டு வாரற்க.