குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 231

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “அவர் இங்கே வந்தாலும் என்னோடு அளவளாவாமல் செல்வர். அவருக்கு என்பால் அன்பு இலதாயிற்று” என்று தலைவி கூறி வாயில் மறுத்தது.

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே - நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம் . . . . [05]

வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

தோழி! தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவில் வாரார்; இத்தெருவில் வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்; நாணத்தை அழித்து தக்கதிதுதகாததிது என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும் காமமானது வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல போய் நெடுந்தூரத்தில் அழியும்படி அயலாருடைய சுடுகாட்டைப் போல நம்மைக் கண்டும் வேறொன்றும் புரியாமல் செல்லுவார்.

முடிபு:

வாரார்; முயங்கார்; காமம் சேட்படக் கழிப.

கருத்து:

தலைவர் என்பால் அன்பின்றி ஒழுகுகின்றார்.