குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 220

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.

பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் . . . . [05]

வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின் - தோழி! - பொருட் பிரிந்தோரே.
- ஒக்கூர் மாசாத்தியார்.

பொருளுரை:

தோழி! பொருள்ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்த தலைவர் பழைய மழையினால் தழைத்த புனத்தில் உள்ள புதிய வரகினது ஆண் மான் மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள் சேர்ந்த பக்கத்தில் மலர்ந்த முல்லைக் கொடியினது காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தை உடைய செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள் மலர்ந்த நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில் வண்டுகள் அம்மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக் காலத்திலும் வாராராயினார் இதனைக் கருதுவாயாக.

முடிபு:

தோழி, பிரிந்தோர் மாலையும் வாரார்; கண்டிசின்.

கருத்து:

தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வரவும் வந்திலர்.