குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 212

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியை கூட்டுவித்தற் பொருட்டுத் தோழியிடம் தலைவன் வேண்ட, அதற்கு இணங்கிய தோழி அவனை ஏற்றுக்கொள்ளும்படி தலைவியிடம் கூறியது.

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடைகரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற, நோகோ யானே . . . . [05]
- நெய்தற் கார்க்கியன்.

பொருளுரை:

நெய்தல் நிலத் தலைவனான உன்னுடைய காதலன் தாமரை அலங்காரத்தையுடைய உயர்ந்த தேரில் மணிகளின் ஒலியுடன் வருகின்றான். தெளிந்த நீரை உடைய கடல் அலைகள் இடிக்கும் மணல் நிறைந்த கடற்கரையில் தேரை ஓட்டிக் கொண்டு உன்னைக்காண வந்து விட்டு, நாம் நாணும்படி சென்று விடுகின்றான். இந்தக் காதல் பரிதாபத்திற்கு உரியது. உறுதியாக இது அழிந்து விடும். நான் உனக்காக வருந்துகின்றேன்.

குறிப்பு:

அளிதோ - ஓகாரம் அசை நிலை, தானே - தான், ஏ - அசை நிலைகள், நோகோ - ஓகாரம் அசை நிலை, யானே: ஏகாரம் அசை நிலை. கொடுஞ்சி (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர் முன் நடப்படுவது. தேரூரும் தலைவர் இதைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம். மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 - அளிதோ தானே காமம்.

சொற்பொருள்:

கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன், ஊர்ந்த - ஓட்டிக் கொண்டு வந்த, கொடுஞ்சி - தேரின் முன் பகுதியில் உள்ள அலங்காரம், நெடுந்தேர் - உயர்ந்த தேர், தெண் கடல் - தெளிவான நீரையுடையக் கடல், அடைகரை - மணல் நிறைந்த கரை, நீர் நிறைந்த கரை, தெளிமணி - தெளிவான மணிகள், ஒலிப்ப - ஒலிக்க, காண வந்து - உன்னைப் பார்க்க வந்து, நாணப் பெயரும் - நாம்நாணும்படி சென்று விடுவது, அளிதோ தானே காமம் - காதல் என்பது பரிதாபமானது, விளிவது - அழியும், மன்ற - கண்டிப்பாக, நோகோ யானே - நான் வருந்துகின்றேன்