குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 021

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியிடம் தலைவி கூறியது.

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே . . . . [05]
- ஓதலாந்தையார்.

பொருளுரை:

காட்டில், புதிய சரக்கொன்றை மலர்கள், தழைகளின் இடையே, வண்டுகள் தேனை உண்ணுவதற்காக வந்து விழும்படி, நீண்ட சரங்களாக மலர்ந்துள்ளன. அவை, பொன் தலை அணிகளைக் கோத்துக் கட்டிய பெண்களின் கூந்தலைப் போல் தோன்றுகின்றன. இது மழைக் காலம் என்று காடு கூறினாலும், நான் நம்ப மாட்டேன். என்னுடைய காதலர் பொய் சொல்ல மாட்டார்.

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல என்று தெளிவது போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி. வண்டுபடத் ததைந்த (1) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - வண்டு மொய்க்கும்படி நெருங்கிய, வண்டுகள் விழுததாற் சிதறின என்றலுமாம். கதுப்பின் - இன் உருபு ஒப்புப் பொருளது, ஓகாரம் - பிரிநிலை, ஏகாரம் - அசை நிலை.

சொற்பொருள்:

வண்டு படத் ததைந்த - வண்டுகள் வந்து வீழும்படி செறிந்த, கொடி - சரம், நீண்ட, இணர் - கொத்துக்கள், இடையிடுபு - தழைகளின் இடையே, பொன் செய் புனை இழை - பொன்னால் செய்த நகைகள், கட்டிய மகளிர் - கோத்துக் கட்டிய மகளிர், கதுப்பின் தோன்றும் - கூந்தலைப் போன்று தோன்றும் (கதுப்பின் - இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), புதுப் பூங் கொன்றை - புதிய கொன்றை மலர்கள், கானம் - காடு - மழைக் காலம் என்று கூறினாலும், யானோ தேறேன் - நான் நம்ப மாட்டேன், அவர் பொய் வழங்கலரே - அவர் பொய் சொல்ல மாட்டார்