குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 276

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தோழியால் சேட்படுத்தப்பட்ட விடத்துத் தலைவன், "இனிமடல் ஏறிச் சான்றோரறிய வழக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன்" என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது.

பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று - இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து . . . . [05]

யான் தற் கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!
- கோழிக் கொற்றனார்.

பொருளுரை:

மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய இளைய தலைவியினது பாவையைப் பண்ணி ஈந்தும். அதன் பொருட்டுப் பஞ்சாய்க் கோரை வளர்ந்த பள்ளமாகிய நீர் நிலையைச் சுற்றியும் இவளது தோற்றம் செய்து எழுந்த அழகிய நகிலில் நிறம் பெற நான் எழுதிய தொய்யிலை இவளைப் பாதுகாத்து நிற்போர் அறிதலையும் செய்யார்; நீதியை உடைய அரசனது செங்கோன்மையை உடைய அறங்கூற வையத்தில் யான் தலைமகளை வினாவினால் இஃது எவ்வாறாவது? ஆதலின் இந்த வருத்தத்தை உடைய ஊர் நிச்சயமாக மிக்க அறிவின்மையை உடையது இரங்கத் தக்கது!

முடிபு:

தைஇயும் சூழ்ந்தும் எழுதிய தொய்யிலை, காப்போர் அறியார்; அரசன் அவையத்தில் யான் கடவின் யாங்காவது? இவ்வூர் பேதை; அளிது.

கருத்து:

மடலேறி அறங்கூற வையத்துச் சான்றோரது துணை கொண்டு தலைவியை மணந்து கொள்வேன்.